கனெக்ட்ஆன் நிறுவனம் தங்களை அன்புடன் வரவேற்கிறது 

கனெக்ட்ஆன் என்பது,  Ambera Technoz Private Limited என்னும் நிறுவனத்தின் செயல்பாட்டில் இயங்கும் ஓர்  அங்கம். ஆம்பெரா 13 நவம்பர் 2020 - ல் முறையாக பதிவு செய்யப்பட்ட ஓர்  நிறுவனம். 

 

மேலும்  ஆம்பெரா பற்றிய சில விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள் 

   ஆம்பெரா நிறுவனத்தின் லோகோவின் பொருள்

"ஆம்பெரா என்பது குடையிலிருந்து பெறப்பட்டது. 
குடையின் கீழ் மக்களுக்கு நிழல் கிடைக்கிறது. 
ஆம்பெராவின் கீழ் மக்களுக்கு  வாழ்வாதாரம் கிடைக்கிறது."

 

ஆம்பெரா நிறுவனம் மக்களுக்கு பல நற்செயல்களை செய்யும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஓர் உன்னத நிறுவனம். கனெக்ட்ஆன் போல் வேறு சில தொழில்களையும் வழிநடத்தி கொண்டிருக்கின்ற நிறுவனம். 

அவை என்ன என்று பார்க்கலாம் ; 

A to Z Home Services

2011  ஆம் ஆண்டு முதல் சென்னை மாநகரில் இயங்கி கொண்டிருந்த A to Z Home Services என்ற, வீடுகளுக்கு தேவையான சர்வீஸ் வேலைகளை (plumbing, electrical, civil, painting, carpentry போன்ற) செய்து கொண்டிருக்கும் நிறுவனத்தை இப்போது ஆம்பெரா வழிநடத்துகிறது. 

A to Z Tolet

2013 முதல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் A to Z Tolet என்ற Real Estate நிறுவனத்தையும் இப்போது ஆம்பெரா வழிநடத்துகிறது. 

CK RAMCHAND FOUNDATION

14 அக்டோபர் 2020 - ல் மக்களுக்கு சமூக சேவை செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட CK RAMCHAND FOUNDATION இப்போது ஆம்பெரா மூலம் செயல்படுகிறது, அதற்காக helpotherz.com என்றொரு இணையதளத்தையும் உருவாக்கி மக்களுக்கு சேவைகள் செய்து வருகின்றது என்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்.
 

இப்போது நாம் கனெக்ட்ஆன் பற்றிய விஷயங்களை பார்க்கலாம் 

கனெக்ட்ஆன் நிறுவனம் 1 செப்டம்பர் 2014 - ல் டொமைன் ( இணையதளம்) பதிவு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.  

அதன் பிறகு ஜனவரி 2017 முதல் சென்னை மாநகரம் முழுவதும் ஆன்லைன் மூலம் மக்களுக்கு தேவையான பொருள்களை விற்பனை செய்ய தொடங்கியது.  பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு redeemable loyalty points (மீட்கக்கூடிய விசுவாச புள்ளிகள்) கொடுத்து அவர்களை மகிழவித்து வந்தது. 

மக்கள் மிகவும் எளிதாக தனது சேவையை பயன்படுத்திக் கொள்ள கனெக்ட்ஆன் நிறுவனம், 29 செப்டம்பர் 2021 தேதியன்று Mobile App - ஐ பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. 

தொடர்ந்து பல புதுமைகளை புகுத்தி மக்களுக்கு சேவை செய்து வந்துகொண்டிருக்கும் போது ஒரு புதிய ஐடியா உதயம் ஆனது. அதன் மூலம் மக்கள் கூடுதல் பயன்பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிறுவனத்திற்கு ஆணித்தரமாக தோன்றியதால் அதை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சாப்ட்வேர் உருவாக்கத்தை சிறிது மேம்படுத்தி 1 மார்ச் 2022 - ல் அந்த புதிய ஐடியாவை மக்களுக்கு ஒரு வருமான திட்டமாக அறிமுகம் செய்தது.

அறிமுகம் செய்த நாள் முதல் ஒவ்வொரு நபரும் ஆர்வமாக கனெக்ட்ஆன் நிறுவனத்தில் இணைந்து வருமானம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார்கள். 

மேலும் மக்களுக்கு வியாபார யுக்திகளை பயிற்சி மூலம் கற்றுக்கொடுத்து அவர்களை ஒரு தொழில் முனைவராக உருவாக்கி கொண்டு இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து நிறுவனம் பல புதிய செயல்களை கொடுத்து கொண்டே இருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

 

கனெக்ட்ஆனின் தற்போதைய செயல்பாடுகள்

மக்கள் அனைவரையும் மாதம்தோறும் ஒரு நிலையான வருமானம் சம்பாதிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், நேர்மையான முறையில் பல அத்தியாவசிய தேவையுள்ள தொழில் முறைகளை இணைத்து வருமான வாய்ப்பை உருவாக்கி கொடுத்து கொண்டிருக்கிறது.

 

கனெக்ட்ஆன் எவ்வாறு செயல்படுகிறது 

கனெக்ட்ஆன் ஒரு டிஜிட்டல் முறையில், உள்ளூர்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுடைய தொழில் வளர்ச்சிக்கு உதவும் விதமாக, வாடிக்கையாளர்களையும் வியாபாரிகளையும் இணைக்கும் செயலில் ஒரு புதுமையை புகுத்தி செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் வியாபாரிகள் மற்றும் மக்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு பயன்படுத்தும் செயல்களில் இருந்து வருமானம் சம்பாதிக்க முடிகிறது.

Copyright © 2015 connecton.in All Rights Reserved.